பள்ளிபாளையம் அருகே பிளஸ் 1 மாணவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

பைல் படம்
Suicide Today - பள்ளிபாளையம் ஆண்டிக்காடு பகுதியில் வசிப்பவர் மாரியப்பன். கூலி தொழிலாளி. இவரது மகன் பிரபாகரன்(வயது 17.) ஓட்டமெத்தை அருகே உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 படித்து தேர்வு எழுதியிருந்தார். தேர்வு முடிவு வெளியான நிலையில் இவர் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த நிலையில் இருந்த இவர் அலமேடு பகுதியில் உள்ள ரயில்வே டிராக்கில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவலறிந்த ஈரோடு ரயில்வே போலீசார், சம்பவ இடம் வந்து பிரேதத்தை கைப்பற்றினர். இது குறித்து ரயில்வே போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவரது குடும்பத்தார் மற்றும் அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu