நாட்டுப்புற பாடல்கள் மூலம் தேர்தல் விழிப்புணர்வு

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் வாக்காளர்கள் 100 சதவீதம் தேர்தலில் வாக்களிக்க முன்வர வேண்டும் என்பதை வலியுறுத்தி தெருக்கூத்து கலைஞர்கள் நாட்டுப்புற பாடல்கள் மூலம் விழிப்புணர்வு பரப்புரை மேற்கொண்டனர்.

தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருப்பதால் தேர்தல் ஆணையம் சார்பில் 100சதவீத வாக்குபதிவு நிகழ்த்த வேண்டும் என்பதற்காக பல்வேறு கட்ட விழிப்புணர்வு பிரச்சாரத்தை தேர்தல் ஆணையம் முன்னெடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பேருந்து நிலையத்தில் தேர்தல் அலுவலர்கள் தெருகூத்து கலைஞர்களை கொண்டு நாட்டுப்புற பாடல்கள் மூலம் வாக்கு உரிமை பெற்றுள்ள அனைவரும் வாக்களிக்க வேண்டும்.

வாக்குக்கு பணம் வாங்க கூடாது,தேர்தலுக்கு தேர்தல் ஆணையம் சார்பில் வாக்காளர்களுக்கு செய்து வரும் நடவடிக்கைகள் குறித்து பாடல்கள் மூலமாக பாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது.தொடர்ந்து பொதுமக்கள் மத்தியில் துண்டு பிரசுரங்களை தேர்தல் அலுவலர்கள் வழங்கினர்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil