ஜேஜேகே நடராஜா நினைவு இயக்கம் சார்பில் இலவச கண் கண்ணாடி வழங்கும் விழா

ஜேஜேகே நடராஜா நினைவு இயக்கம் சார்பில் இலவச கண் கண்ணாடி வழங்கும் விழா
X

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் ஜேகேகே நடராஜா நினைவு இயக்கத்தின் சார்பில் நடைபெற்ற இலவச கண் சிகிச்சை முகாமில் பங்கேற்று பரிசோதனை செய்தவர்களுக்கு முதற்கட்டமாக 160 பேருக்கு இலவச கண் கண்ணாடி வழங்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் ஜேகேகே நடராஜா நினைவு இயக்கம் மற்றும் சென்னை இந்தியா விஷன் இன்ஸ்டியூட் இணைந்து கடந்த ஜனவரி 28ம் தேதி மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம் குமாரபாளையம் ஜேகேகே ரங்கம்மாள் ஆரம்பப்பள்ளியில் வைத்து நடைபெற்றது. இதில் குமாரபாளையம் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு இலவசமாக கண் பரிசோதனை மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது .


இதனைத் தொடர்ந்து இன்று ஜேகேகே ரங்கம்மாள் பள்ளியில் கண் பரிசோதனை செய்து கொண்ட நபர்களுக்கு அவர்களது பார்வைத்திறனுக்கு ஏற்ப ஜேகேகே நடராஜா நினைவு இயக்கம் சார்பில் இலவச கண் கண்ணாடி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஜேகேகே நடராஜா கல்வி நிறுவனங்களின் இயக்குனர் ஓம் சரவணா மற்றும் ஐஸ்வர்யா ஓம்சரவணா ஆகியோர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கண் குறைபாடு உள்ள 160 பேருக்கு முதல் கட்டமாக பார்வை தெளிவு பெற இலவச கண் கண்ணாடி வழங்கி சிறப்பித்தனர். கண்ணாடிகளை பெற்றுக்கொண்ட பயனாளிகள் ஜேகேகே நடராஜா கல்வி நிறுவனங்களின் இயக்குனர் ஓம் சரவணா மற்றும் ஐஸ்வர்யா ஓம்சரவணா ஆகிய இருவருக்கும் நன்றிகளை தெரிவித்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!