சுயேட்சையாக களமிறங்குங்கள்- பாஜக நிர்வாகிக்கு வேண்டுகோள்

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் அப்பகுதி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை சேர்ந்தவர் ஓம் சரவணா. இவர் ஜேஜேகே நடராஜா கல்வி குழுமத்தின் நிர்வாக இயக்குநர் பொறுப்பில் இருந்து கொண்டு மருத்துவசேவை உட்பட பல சமூக சேவைகளை தொடர்ந்து செய்து வருகிறார். நாமக்கல் மாவட்ட பாஜக., செயலாளர் பதவி வகித்து தீவிர அரசியலிலும் ஈடுபட்டு தொண்டாற்றி வருகிறார். இதனால் பாஜக சார்பில் இவருக்கு குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதி தேர்தல் ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளதால் வரும் சட்டமன்றத் தேர்தலில் குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதியில் பாஜக இணைந்துள்ள கூட்டணி வெற்றி பெற தேர்தல் பணியாற்றி வருகிறார்.

இதற்கிடையே தற்போது இந்த தொகுதியின் எம்எல்ஏ.,வாக மின்சாரதுறை அமைச்சர் தங்கமணி இருந்து வருகிறார். இதையடுத்து கடந்த மூன்று முறை அதிமுகவின் சார்பில் தங்கமணி வேட்பாளராக நிறுத்தப்பட்டு வருவதால் இந்த முறை கூட்டணி கட்சிக்கு வாய்ப்பு வழங்குமாறு தோழமை கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.இந்நிலையில் பாஜக நிர்வாகி ஓம் சரவணாவின் ஆதரவாளர்கள் கட்சியின் சார்பில் சீட்டு வழங்காவிட்டால் சுயேட்சையாக நிற்கும்படி குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பள்ளிபாளையம், ஆவத்திபாளையம், அக்ரஹாரம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. இந்த ஆதரவு போஸ்டரால் குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதி அரசியல் களத்தில் பரபரப்புடன் பேசும் பொருளாக மாறி வருகிறது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!