அனுமதியின்றி இயங்கி வந்த சாயப்பட்டறைகள் இடிப்பு

அனுமதியின்றி இயங்கி வந்த சாயப்பட்டறைகள் இடிப்பு
X
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே அனுமதியின்றி இயங்கி வந்த இரண்டு சாயப்பட்டறைகளை மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் இடித்து ஆலை உரிமையாளர் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சுற்றுவட்டார பகுதியில் செயல்பட்டு வரும் சாயசலவை ஆலைகள் கழிவு நீரை, சுத்திகரிப்பு செய்யமால் கழிவு நீரை வெளியேற்றி வரும் ஆலைகள் மீது மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக பள்ளிபாளையம் காவிரி ஆற்றுப் பகுதியில் தொடர்ந்து சாயக் கழிவுநீர் கலந்து வருவதாக வந்த புகாரை அடுத்து இன்று மாசுக்கட்டுப்பாட்டு வாரிய கோட்ட பொறியாளர் செல்வகுமார் தலைமையில் அதிகாரிகள் பள்ளிபாளையம் பகுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்பொழுது பள்ளிபாளையம் அருகே உள்ள ஆண்டிகாடு பகுதியில் 2 சாயப்பட்டறைகள் அனுமதியின்றி இயங்கி வருவதும் அதிலிருந்து சாயக் கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமல் நிறைவேற்றப் படுவதும் கண்டறிந்த அதிகாரிகள் உடனடியாக அந்த இரு சாயப் பட்டறைகளையும் சுத்தியல் மற்றும் கடப்பாறைகளால் இடித்துத் தள்ளினர். இதையடுத்து இரவு நேரங்களில் நீர்நிலைகளில் சாயக்கழிவு நீரை வெளியேற்றும் ஆலைகள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Next Story