சாம்பல் துகள்களால் பொதுமக்கள் அவதி

சாம்பல் துகள்களால் பொதுமக்கள் அவதி
X

வீட்டருகே நிறுத்தி இருக்கும் இருசக்கர வாகனத்தில் படிந்து இருக்கும் சாம்பல்.

பள்ளிபாளையம் சேஷசாயி காகித ஆலை புகை போக்கி வழியாக வெளியேறும் சாம்பல் பவுடரால் ஒரு கிராமமே அவதியுறும் நிலை ஏற்பட்டுள்ளது.

பள்ளிபாளையம் சேஷசாயி காகித ஆலை புகை போக்கி வழியாக வெளியேறும் சாம்பல் பவுடரால் ஒரு கிராமமே அவதியுறும் நிலை ஏற்பட்டுள்ளது.

பள்ளிபாளையம் அருகே சேஷாயி எனும் தனியார் காகித ஆலை செயல்படுகிறது. இந்த காகித ஆலையிலிருந்து மூன்று புகை போக்கிகள் வழியாக புகைகள் வெளியேற்றப்பட்டு வருகிறது இந்த புகைப் போக்கியில் புகையுடன் கலந்து சாம்பலும் வெளியேறி வருகிறது. இதனால் இந்த காகித ஆலை அருகில் உள்ள ஆயக்காட்டூர் எனும் கிராமமே அவதியுறும் சூழல் ஏற்பட்டுள்ளது தற்பொழுது இந்தப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு சுவாசக் கோளாறு மற்றும் எதிர்பாராமல் குழந்தைகள் மூச்சு திணறலால் உடல்நிலை பாதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தப் பகுதியில் உள்ள குடியிருப்புகளின் உள்ளே சாம்பல் படிவதால் உணவு சமைக்கவும், குடிநீர் அருந்தவும் முடியாமல் பொதுமக்கள் அச்சத்துடன் உள்ளனர் பலமுறை ஆலை நிர்வாகத்திடம் எடுத்துக் கூறியும் குடியிருப்புப் பகுதிகளை வந்து ஆய்வு செய்து பின்னர் அதிகாரிகள் ஆலயத்தின் புகை போக்கி ஓட்டை விழுந்து உள்ளது பராமரிப்பு பணி நடந்து வருகிறது என பல்வேறு சாக்கு போக்குகளை சொல்லி வருவதுடன் அந்த புகைப் போக்கியை சுத்தம் செய்வதில்லை இதனால் இந்த கிராமம் பொதுமக்கள் வாழும் தகுதியற்ற கிராமமாக மாறி வருகிறது உடனடியாக அரசு தலையிட்டு தங்கள் பிரச்சனையை தீர்க்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த சாம்பல் பரவுவதால் சுகாதார பாதிப்புகள் ஏற்பட்டு சுவாசப்பிரச்னைகள் மற்றும் சுவாச நோய்கள் வருவதற்கும் வாய்ப்புகள் உள்ளன. அதனால், இதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து தீர்வு காணவேண்டும் என்று ஊர்மக்கள் சார்பாக கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!