பள்ளிபாளையம் அருகே குழந்தை திருமணம்: உறவினர்கள் மறுப்பு

பள்ளிபாளையம் அருகே குழந்தை திருமணம்: உறவினர்கள் மறுப்பு
X

சின்னக்கவுண்டம்பாளையத்தில் குழந்தை திருமணம் நடந்ததாக கூறப்படும் வீட்டில் போலீசார் விசாரணை நடத்தினர்.

பள்ளிபாளையம் அருகே குழந்தை திருமணம் குறித்து சைல்டு லைன் அமைப்பினர் போலீசில் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பள்ளிபாளையம் சின்னக்கவுண்டம்பாளையம், பெருமாள் கோவில் பகுதியில் குழந்தை திருமணம் நடைபெற்றதாக சைல்டு லைன் அமைப்பினருக்கு தகவல் வந்தது. சமூக நலத்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மையம், வி.ஏ.ஒ. ரஞ்சித்குமார் உட்பட பலரும் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்த்தனர். அங்கு பந்தல் போடப்பட்டு திருமணம் நடந்ததற்குரிய அறிகுறிகள் இருந்துள்ளது. அங்குள்ளவர்களிடம் கேட்டால் மறுப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சமூக நலத்துறை சார்பில் பள்ளிபாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story
the future of ai in healthcare