குமாரபாளையம் நகராட்சியில் பூத் சிலிப்புகள் வழங்கும் பணி தீவிரம்

குமாரபாளையம் நகராட்சியில் பூத் சிலிப்புகள் வழங்கும் பணி தீவிரம்
X

குமாரபாளையம் நகராட்சியில் பூத் சிலிப்புகள் வழங்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

குமாரபாளையம் நகராட்சியில் பூத் சிலிப்புகள் வழங்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

குமாரபாளையம் நகராட்சியில் பூத் சிலிப்புகள் வழங்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தமிழக உள்ளாட்சி தேர்தல் நாள் அறிவிக்கப்பட்டது முதல் குமாரபாளையம் நகராட்சியில் வேட்புமனு தாக்கல், பரிசீலனை, திரும்ப பெறுதல், இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு, சுயேச்சை வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு, வேட்பாளர்கள் ஆலோசனை கூட்டம், ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணி, ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பான அறையில் வைத்து பூட்டி சீல் வைத்தல், 2ம் கட்ட ஓட்டுச் சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி முகாம் உள்ளிட்ட பணிகள் நடந்து முடிந்தன.

33 வார்டுகளில் உள்ள பொதுமக்களுக்கு பூத் சிலிப் வழங்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. பொதுமக்களும் ஆர்வத்துடன் பூத் சிலிப்பை பெற்று வருகின்றனர். 78 ஓட்டுச்சாவடிகளில் இருக்கைகள், டேபிள்கள் அமைத்தல், மின் விளக்குகள், மின் விசிறிகள், ஜன்னல், கதவுகள் சீரமைத்தல் பணிகள் செய்யப்படவுள்ளன.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!