நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 322 ஊராட்சிகளில் மே 1ம் தேதி கிராம சபைக் கூட்டம்
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 322 கிராம ஊராட்சிகளிலும் நாளை கிராம சபைக் கூட்டம் நடைபெறும் என கலெக்டர் ஸ்ரேயா சிங் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
தமிழகம் முழுவதும் நாளை (1ம் தேதி) ஞாயிற்றுக்கிழமை தொழிலாளர் தினம் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 322 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது. கோடை வெய்யில் தாக்கத்தின் காரணமாக காலை இக்கூட்டம் 10 மணிக்கு நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில் விவாதத்திற்கு எடுத்து கொள்ளப்பட உள்ள பொருள்கள்:
கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்தும், ஊராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப் பணிகளின் முன்னேற்றம் மற்றும் நிதி செலவின விபரங்கள் குறித்தும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் - 2 குறித்தும் விவாதிக்கப்படவுள்ளது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், சுகாதாரம் (பள்ளி கழிப்பறைகள் மற்றும் அங்கன்வாடி மையக் கழிப்பறைகள்), ஊட்டச்சத்து இயக்கம், பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி தடைசெய்தல், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), ஜல் ஜீவன் திட்டம், வேளாண்மை - உழவர் நலத்துறை, நமக்கு நாமே திட்டம், மகளிர் திட்டம், குழந்தைகள் அவசர உதவி எண், முதியோர் உதவி எண், விவசாயிகள் கடன் அட்டை மற்றும் இதர பொருட்கள் குறித்தும் விவாதிக்கப்படவுள்ளது என தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu