ஆளையும் காணோம்; காரையும் காணோம்: வெறிச்சோடிய ராசிபுரம் கடைவீதி

ஆளையும் காணோம்; காரையும் காணோம்:  வெறிச்சோடிய ராசிபுரம் கடைவீதி
X

ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் வெறிச்சோடி கிடக்கும் ராசிபுரம் பஸ் நிலையம் பகுதி கடைவீதி.

முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், ராசிபுரம் கடை வீதி வெறிச்சோடியது.

முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் ராசிபுரம் நகரம் முழுவதும் இன்று வெறிச்சோடி காணப்பட்டது.

கொரோனா பரவல் தமிழகத்தில் அதிகரித்து வருவதால்,தமிழக அரசு ஞாயிறு அன்று மட்டும் முழு ஊரடங்கை அறிவித்துள்ளது. அதனால் இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பொது மற்றும் பிற வாகன போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டிருந்தது.

நெருக்கடி மிகுந்த ராசிபுரம் கடைவீதி வெறிச்சோடி காணப்பட்டது. மக்கள் நடமாட்டம் இல்லை. கடைகள் எதுவும் திறக்கப்படவில்லை. அதேபோல பஸ் நிலையம் காலியாக இருந்தது. இன்று ஞாயிறு என்பதால் கறிக்கடைகள், மீன்கடைகளில் கூட்டம் அலைமோதும். ஆனால், நேற்று (சனிக்கிழமை)மாலையே சிக்கன்,மட்டன், மீன் வாங்குவோர் வாங்கிவிட்டனர். இதனால், நேற்று இரவு 10மணி வரை மட்டன்,சிக்கன் மற்றும் மீன் விற்பனை களைகட்டியது.

அதற்கு மாறாக, இன்று காலை முதல் சாலைகள் வெறிச்சோடின. அரசின் உத்தரவை மதித்து மக்கள் கடைபிடிப்பது உறுதியாகியுள்ளது. ராசிபுரத்தில் சில இடங்களில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!