நாமக்கல் மாவட்டத்தில் இன்று 13ம் கட்ட மெகா கொரோனா தடுப்பூசி முகாம்
இது குறித்து கலெக்டர் ஸ்ரேயா சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: நாமக்கல் மாவட்டத்தில், இன்று 4ம் தேதி சனிக்கிழமை 13-ம் கட்ட மெகா கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற உள்ளது. மாவட்டம் முழுவதும் உள்ள அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், அரசு பள்ளிகள் உள்ளிட்ட இடங்களில் 472 நிலையான முகாம்கள் மற்றும் 41 நடமாடும் முகாம்கள் என மொத்தம் 513 முகாம்கள் மூலம் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.
இந்த முகாம்களில் மூலம், 1 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. 210 டாக்டர்கள், 430 நர்சுகள், 1,400 ஆசிரியர்கள், 1,600 அங்கன்வாடி பணியாளர்கள், 1,400 தன்னார்வலர்கள், 415 பயிற்சி நர்சுகள் மற்றும் 265 பயிற்சி சுகாதார ஆய்வாளர்கள் தடுப்பூசி முகாம் பணிகளில் ஈடுபட உள்ளனர்.
கொரோனா நோய்த்தொற்று முழுமையாக ஒழியவில்லை என்பதை உணர்ந்து, தடுப்பூசி செலுத்தாமல் உள்ளவர்கள் சிறப்பு மையங்களுக்கு சென்று உடனடியாக தடுப்பூசி செலுத்திக் கொண்டு தங்களை பாதுகாத்துக்கொõள்ள வேண்டும் என்று கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மாவட்டத்தில் 10 லட்சத்து 17 ஆயிரத்து 866 பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 5 லட்சத்து 72 ஆயிரத்து 788 பேருக்கு 2-ம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டு உள்ளது. அதேபோல் இதுவரை மாவட்டத்தில் 12 கட்டமாக நடத்தப்பட்ட மெகா தடுப்பூசி முகாம்களில் மட்டும் 4 லட்சத்து 74 ஆயிரத்து 471 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu