நீா்நிலைகள், திறந்தவெளியில் குப்பைகளைக் கொட்டினால் ரூ.1000 - ரூ.5000 அபராதம்

X
By - jananim |22 Feb 2025 2:20 PM IST
ராசிபுரம் பகுதியில் நீா்நிலைகள், திறந்தவெளியில் குப்பைகளைக் கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் என நகராட்சி ஆணையாளா் சூ.கணேசன் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
நாமக்கல் : ராசிபுரம் பகுதியில் நீா்நிலைகள், திறந்தவெளியில் குப்பைகளைக் கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் என நகராட்சி ஆணையாளா் சூ.கணேசன் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ராசிபுரம் பகுதியில் உள்ள ஏரிகளிலோ அல்லது திறந்த வெளியிலோ குப்பைகளைக் கொட்டினால் ரூ.1,000 முதல் ரூ. 5 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும்.
எனவே, வணிகா்கள், பொதுமக்கள் யாரும் குப்பைகளை நீா்நிலைகளில் கொட்ட வேண்டாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஏரி, குளம் உள்ளிட்ட பகுதிகளில் விழிப்புணா்வு பதாகைகளை நகராட்சி நிா்வாகம் வைத்துள்ளது.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu