நாமக்கல் மெகா கொரோனா முகாம்: 32,085 பேருக்கு தடுப்பூசி

நாமக்கல் மெகா கொரோனா முகாம்: 32,085 பேருக்கு தடுப்பூசி
X

நாமக்கல் அருகில் உள்ள வீசானம் சத்யா நகரில் நடைபெற்ற சிறப்பு முகாமில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற மெகா கொரோனா தடுப்பூசி முகாம்களில், ஒரே நாளில் 32,085 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

தமிழகம் முழுவதும் மெகா கெரோனா தடுப்பூசி முகாம்கள் சனிக்கிழமை தோறும் நடைபெற்று வந்தன. இந்த வாரம் 8ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டது. இதையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு பள்ளிகள் உள்ளிட்ட 700க்கும் மேற்பட்ட இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

மொத்தம் 1 லட்சம் பேருக்கு தடுப்பூசிஞ்க செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற்ற, இந்த முகாம்களில் முதல் தவணை, இரண்டாம் தவணை மற்றும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டன.

மொத்தம் 32,085 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. டிஆர்ஓ கதிரேசன் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் நேரடியாக சென்று முகாம்களை ஆய்வு செய்தனர்.

Tags

Next Story
ai automation in agriculture