3 கூட்டுறவு சங்கங்களின் சார்பில் ரூ. 25.91 லட்சம் கூட்டுறவு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிதி வழங்கல்

முள்ளுக்குறிச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில், கூட்டுறவு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி, கல்வி நிதிக்காக ரூ. ரூ. 10,06,392 க்கான காசோலை, மண்டல கூட்டுவு இணைப்பதிவாளர் அருளரசுவிடம் வழங்கப்பட்டது.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்டம், முள்ளுக்குறிச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் 2021-2022 ம் ஆண்டு நிகர லாபத்தில், தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்திற்கு செலுத்த வேண்டிய கூட்டுறவு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிதி ரூ. 79,774, கூட்டுறவு கல்வி நிதி ரூ.53183 மற்றும் 2022-2023 ம் ஆண்டு நிகர லாபத்தில் கூட்டுறவு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிதி ரூ. 5,24,061, கூட்டுறவு கல்வி நிதி ரூ.3,49,374 ஆக மொத்தம் ரூ. 10,06,392 க்கான காசோலையை, நாமக்கல் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அருளரசுவிடம், சங்கத்தின் செயலாட்சியர் சதீஷ்குமார் வழங்கினார். நாமக்கல் சரக துணைப்பதிவாளர் (பொ) பால் ஜோசப், நாமக்கல் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய சார் பதிவாளர் சரவணன் மற்றும் செயலாளர் வெங்கடாசலம் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
* மோகனூர் மின் பகிர்மான அலுவலர் மற்றும் பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன நாணய கடன் சங்கத்தின் சார்பில் தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்திற்கு செலுத்த வேண்டிய கூட்டுறவு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிதி ரூ. 4,05,484, கூட்டுறவு கல்வி நிதி ரூ.2,70,322 என மொத்தம் ரூ. 6,75,806 க்கான காசோலையை, மண்டல இணைப்பதிவாளர் அருளரசுவிடம், சங்க செயலாட்சியர் சிவசக்தி வழங்கினார். செயலாளர் மாதேஸ்வரன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்
* கார்கூடல்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில், தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்திற்கு செலுத்த வேண்டிய கூட்டுறவு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிதி ரூ. 5,45,298, கூட்டுறவு கல்வி நிதி ரூ. 3,63,532 மொத்தம் ரூ. 9,08,830 க்கான காசோலையை, மண்டல இணைப்பதிவாளர் அருளரசுவிடம் சங்க செயலாட்சியர் சதீஸ்குமார் வழங்கினார். சங்க செயலாளர் சேகர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
3 கூட்டுறவு சங்கங்களின் சார்பில் கூட்டுறவ ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிதியாக மொத்தம் ரூ.25 லட்சத்து 91 ஆயிரத்து 28க்கான காசோலைகள் மண்டல இணைப்பதிவாளரிடம் வழங்கப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu