நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 1078 பேர் வேட்பு மனு தாக்கல்
நாமக்கல் மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நேற்று ஒரே நாளில் 709 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதுவரை மொத்தம் 1,078 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 5 நகராட்சிகள் மற்றும் 19 பேரூராட்சிகளில் உள்ள, 447 வார்டுகளுக்கு வரும் 19ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக கடந்த ஜன.28ம் தேதி முதல் வேட்பு மனு தாக்கல் நடைபெற்று வருகிறது.
நேற்று 3ம் தேதி நாமக்கல் நகராட்சியில் 59 பேரும், இராசிபுரம் நகராட்சியில் 23 பேரும், திருச்செங்கோடு நகராட்சியில் 56 பேரும், கொமாரபாளையம் நகராட்சியில் 72 பேரும், பள்ளிபாளையம் நகராட்சியில் 17 பேரும் என ஒரே நாளில் 227 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். ஏற்கனவே 147 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். 5 நகராட்சியில் உள்ள 153 வார்டுகளுக்கு இதுவரை 374 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 19 பேரூராட்சிகளில் 294 வார்டுகள் உள்ளன. நேற்று ஆலாம்பாளையத்தில் 23 பேரும், அத்தனூரில் 15 பேரும், எருமப்பட்டியில் 31 பேரும், காளப்பநாய்க்கன்பட்டியில் 29 பேரும், மல்லசமுத்திரத்தில் 17 பேரும், மோகனூரில் 19 பேரும், நாமகிரிப்பேட்டையில் 27 பேரும், படைவீட்டில் 25 பேரும், பாண்டமங்கலத்தில் 17 பேரும், பரமத்தியில் 27 பேரும், பட்டணத்தில் 23 பேரும், பிள்ளாநல்லூரில் 29 பேரும், பொத்தனூரில் 17 பேரும், ஆர். புதுப்பட்டியில் 38 பேரும், சீராப்பள்ளியில் 37 பேரும், சேந்தமங்கலத்தில் 8 பேரும், ப.வேலூரில் 53 பேரும், வெங்கரையில் 30 பேரும், வெண்ணந்தூரில் 17 பேரும் என ஒரே நாளில் மொத்தம் 482 பேர் மனு தாக்கல் செய்தனர். ஏற்கனவே 222 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். மொத்தம் 294 வார்டுகளுக்கு இதுவரை 704 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.
மாவட்டத்தில் மொத்தமுள்ள 447 வார்டுகளுக்கு இதுவரை 1078 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இன்று 4ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu