புத்தாண்டை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை

புத்தாண்டை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை
X

புத்தாண்டை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது.

நாமக்கல்லில் புகழ்பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்குள்ள ஆஞ்சநேயர் 18 அடி உயரத்தில் அமைந்துள்ளார். இந்நிலையில் புத்தாண்டை முன்னிட்டு ஆஞ்சநேயர் கோவிலில் இன்று அதிகாலையில் நடை திறக்கப்பட்டு ஆஞ்சநேயருக்கு எண்ணெய், சிகைக்காய், மஞ்சள் உள்ளிட்ட வாசனை பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. வடைமாலை சார்த்தப்பட்டது. தொடர்ந்து ஆயிரம் லிட்டர் பால் கொண்டு சிறப்பு அபிஷேகமும், தயிரால் அபிஷேகமும் நடைபெற்றது.

இதனையடுத்து முக்கிய நிகழ்வாக, 18 அடி உயரத்தில் நின்ற திருக்கோலத்தில் உள்ள ஆஞ்சநேயர் சுவாமிக்கு, உடல் முழுவதும் தங்கக் கவசம் சார்த்தப்பட்டு, தங்கக் கவச அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார். தொடந்து மகா தீபாராதனை நடைபெற்றது. ஏராளமானோர் ஆஞ்சேநேயர் சுவாமியை நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!