அரசு மீது வேண்டுமென்றே ஸ்டாலின் குற்றச்சாட்டு கூறி வருகிறார் - தங்கமணி

அரசு மீது வேண்டுமென்றே ஸ்டாலின் குற்றச்சாட்டு கூறி வருகிறார் - தங்கமணி
X
தமிழக அரசு மீது வேண்டுமென்றே ஸ்டாலின் குற்றச்சாட்டு கூறி வருகிறார் - அமைச்சர் தங்கமணி

நாமக்கல் மாவட்டத்தில் நாளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார். இதனையொட்டி முதல்வர் பயண ஏற்பாடுகளை ஆய்வு செய்த மின் துறை அமைச்சர் தங்கமணி நாமக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், நாமக்கல் மாவட்டத்தில் தமிழக முதல்வர் நாளையும் நாளை மறுதினமும் பொதுமக்களையும், பல்வேறு சமுதாய மற்றும் தொழில் அமைப்பினரையும் சந்திக்கவுள்ளார். ஏற்கனவே திட்டமிட்டபடி பல பகுதிகளுக்கு செல்ல உள்ளதாகவும் தெரிவித்தார்.

தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கூட்டணி கட்சியினர் பங்கேற்கவில்லை என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், அதிமுக தனியாக ஆரம்பித்த தேர்தல் பிரச்சாரம் என்றும், கூட்டணி ஏற்பட்டு அதன் பின்னர் நடைபெறும் பிரச்சார கூட்டம் இல்லை என்றும், இதில் ஏதும் வில்லங்கம் கற்பிக்க வேண்டாம் எனவும் தெரிவித்தார்.

ரேசன் கடைகளில் பொங்கல் பரிசாக வழங்கப்படும் 2,500 ரூபாய்க்கான டோக்கன்களை அதிமுகவினர் வழங்குவதாக திமுக தலைவர் ஸ்டாலினின் குற்றச்சாட்டு குறித்து கேட்ட போது, அரசின் மீது குற்றச்சாட்டு வைக்க வேண்டும் என்பதற்காகவே எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் இவ்வாறு பேசி வருவதாகவும், ‌முதல்வரின் தேர்தல் பிரச்சாரம் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளதோடு, எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ளதாகவும் அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்