நாமக்கல்லில் அரங்கநாதர் பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நாமக்கல் அரங்கநாதர் பெருமாள் திருக்கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு வைபவம் நடைபெற்றது.
நாமக்கல் மலைக் கோட்டையின் கிழக்கு புறத்தில் கி.பி. 8-ம் நூற்றாண்டில் அதியேந்திர குணசீலன் என்ற மன்னரால் கட்டப்பட்ட குடவரை கோவில் கட்டப்பட்டது. இந்த கோவிலில் வைகுண்ட ஏகாதசியை ஒட்டி இன்று அதிகாலை சொர்க்கவாசல் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக திருப்பள்ளி எழுச்சி மற்றும் நித்ய பூஜை நடைப்பெற்றது. தொடர்ந்து ஆகம விதிப்படி பூஜை செய்து, பட்டாச்சாரியர்கள் பரமபத வாசல் வழியாக கூடையில் வைத்து ஜடாரியை கொண்டு வந்தனர்.
அப்போது அங்கு கூடி இருந்தவர்கள் கோவிந்தா, கோவிந்தா கோஷங்கள் எழுப்பி, சாமியை தரிசனம் செய்தனர். கொரோனா தொற்று பரவல் காரணமாக சொர்க்க வாசல் திறப்பின் போது பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி கோவில் இணைய தளத்தில் நேரடியாக ஒளிபரப்பபட்டாலும், ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டும் காலை 6 மணி முதல் தனிமனித இடைவெளியுடன் சாமியை தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu