/* */

புயல் எதிரொலி: வேதாரண்யத்தில் 100 மீட்டர் தொலைவுக்கு உள்வாங்கிய கடல்

மிக்ஜம் புயல் வரும் 5-ஆம் தேதி கரையை கடக்க உள்ளதால் இன்று கடல் உள்வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது

HIGHLIGHTS

புயல் எதிரொலி: வேதாரண்யத்தில் 100 மீட்டர் தொலைவுக்கு உள்வாங்கிய கடல்
X

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் உள்வாங்கிய கடல்

நாகை மாவட்டம் வேதாரண்யம் கடலோர பகுதியாகும். இங்கிருந்து ஏராளமான மீனவர்கள் மீன்பிடிக்க செல்கிறார்கள்.

இந்நிலையில், வங்க கடலில் மையம் கொண்டுள்ள மிக்ஜம் புயல் 5-ஆம் தேதி கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வேதாரண்யம் பகுதி மீனவர்கள் இன்று 4-வது நாளாக கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வில்லை.

இந்த சூழ்நிலையில் இன்று வேதாரண்யத்தில் கடல் திடீரென 100 மீட்டர் தூரத்திற்கு உள்வாங்கியது. இதனால் கரையானது சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது.வழக்கமாக சில மீட்டர் தூரம் கடல் உள்வாங்கும். பின்பு சகஜ நிலைமைக்கு வரும்.இது வழக்கமான ஒன்றுதான் என்றாலும், தற்போது 100 மீட்டர் தூரம் உள்வாங்கி உள்ளதால் மீனவர்கள் அச்சம் அடைந்துள்ளனர். மிக்ஜம் புயல் வரும் 5-ஆம் தேதி கரையை கடக்க உள்ளதால் இன்று கடல் உள்வாங்கி இருப்பதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

Updated On: 2 Dec 2023 10:00 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!