வேதாரண்யம் அருகே ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து தர்ணா போராட்டம்

வேதாரண்யம் அருகே ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து  தர்ணா போராட்டம்
X

வேதாரண்யம் அருகேயுள்ள செண்பகராமநல்லூர் ஊராட்சியில் சனிசந்தை அருகே ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து மாபெரும் தர்ணா போராட்டம் நடைபெற்றது.

மருதூர் இராசபுரம் சாலையில் ரயில்வே இருப்பு பாதை பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்

வேதாரண்யம் அருகேயுள்ள செண்பகராமநல்லூர் ஊராட்சியில் சனிசந்தை அருகே ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து மாபெரும் தர்ணா போராட்டம் நடைபெற்றது.

நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுக்கா, செண்பகராமநல்லூர் ஊராட்சியில் சனிசந்தைசந்தை மருதூர் இராசபுரம் இணைப்பு சாலையில் தென்னக ரயில்வே இருப்பு பாதை பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த பகுதியில் வசிக்கும் விவசாயிகள் விவசாய தொழிலாளர்கள் பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் அப்பகுதியில் இறந்தவர்களின் சடலங்களை மேற்படி இருப்புப் பாதையை கடந்து செல்ல வேண்டியுள்ளது.

பொதுமக்கள் நலன் கருதி பாதாள இருப்புப் பாதை அமைத்து தரக்கோரி, நாகை நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் தென்னக ரயில்வே திருச்சி மண்டல மேலாளர் மற்றும் அது சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை வைத்தும் மாவட்ட ஆட்சியர் பரிந்துரை செய்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து கரியாப்பட்டினம் ரயில்வே நிலையத்தில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் விவசாயிகள் பள்ளி கல்லூரி மாணவ, மாணவர்கள் கலந்து கொண்டு மற்றும் போராட்டக்குழு செண்பகராமநல்லூர் ரயில்வே துறைக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.


Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!