இலங்கைக்கு கடத்த இருந்த விரலி மஞ்சள் பறிமுதல்

இலங்கைக்கு கடத்த இருந்த விரலி மஞ்சள் பறிமுதல்
X

வேதாரண்யத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த இருந்த 750 கிலோ விரலி மஞ்சள், 60 கிலோ ஏலக்காய் ஆகியவற்றை கடலோர காவல் குழும போலீஸாா் பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனர்.

நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த நாலுவேதபதி கிராமம் உலகநாதன்காடு பகுதியை சோ்ந்தவர் கிருஷ்ணமூா்த்தி (56). இவரது வீட்டில் விரலி மஞ்சள் மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக நாகை கடலோரக் காவல் குழும போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, ஆய்வாளா் ராஜா தலைமையிலான போலீஸாா் அங்கு சென்று சோதனையிட்டனா்.அப்போது 30 மூட்டைகளில் 750 கிலோ மஞ்சள், 3 மூட்டைகளில் 60 கிலோ ஏலக்காய் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இவற்றை பறிமுதல் செய்த போலீஸாா், மஞ்சள், ஏலக்காய் ஆகியவற்றை பதுக்கி வைத்திருந்த கிருஷ்ணமூா்த்தி, கஞ்சமலைக்காடு சத்தியராஜ் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

Tags

Next Story