/* */

நாகையில் பள்ளிகள் திறப்பு: ஆர்வத்துடன் வந்த மாணவ, மாணவிகள்

நாகை மாவட்டத்தில் 143 பள்ளிகள் திறக்கப்பட்டது. ஆர்வத்துடன் மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வந்தனர்.

HIGHLIGHTS

நாகையில் பள்ளிகள் திறப்பு: ஆர்வத்துடன்  வந்த மாணவ,  மாணவிகள்
X

நாகையில் ஆர்வமுடன் பள்ளிக்கு வந்த மாணவிகள்

தமிழகம் முழுவதும் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டதை தொடர்ந்து நாகை மாவட்டத்தில் 9 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் பள்ளிக்கு வந்தனர்.

நாகை மாவட்டத்தில் திறக்கப்பட்ட 143 உயர் நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் செய்யப்பட்டிருந்தன.

அக்கரைப்பேட்டை மேல்நிலை பள்ளி, நாகை நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, நடராஜன் தமயந்தி மேல்நிலைப்பள்ளி, காடம்பாடி, சிக்கல் உள்ளிட்ட அரசு பள்ளிகளில் கடும் சோதனைக்கு பிறகு மாணவ மாணவிகள் அனுமதிக்கப்பட்டனர்.


பள்ளி நுழைவு வாயிலில் தெர்மல் ஸ்கேன் பரிசோதனை, கிருமி நாசினி, கொடுத்த பிறகே மாணவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.


இந்தநிலையில் அக்கரைப்பேட்டை மேல்நிலைப்பள்ளியில் நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்பு ராஜ் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

வகுப்பறைகளில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் மாணவர்களிடம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்ட அக்கரைப்பேட்டை மேல்நிலை பள்ளியில் நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்பு ராஜ் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஆட்சியர் கூறுகையில் ; நாகை மாவட்டத்தில் 143 பள்ளிகள் திறக்கப்பட்டு கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளது. கிராமப்புற பள்ளி மாணவர்களுக்கு பேருந்து வசதி உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Updated On: 1 Sep 2021 6:08 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நண்பனே..எனது உயிர் நண்பனே..! பிறந்தநாள் வாழ்த்து..!
  2. லைஃப்ஸ்டைல்
    வயதில் ஆப் செஞ்சுரி அடித்த சாதனை நாயகருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!
  3. லைஃப்ஸ்டைல்
    கவிதை பாடும் அலைகளாக, தமிழில் பிறந்த நாள் வாழ்த்துகள்!
  4. இந்தியா
    கோவாக்சின் பக்க விளைவுகள் குறித்த ஆய்வை கடுமையாக சாடிய ஐசிஎம்ஆர்! ...
  5. வானிலை
    தேனி, விருதுநகர், தென்காசியில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்பு
  6. காஞ்சிபுரம்
    அரசு விதிகளை மீறும் கனரக லாரி: இரவில் கண்காணிக்க தவறும் அலுவலர்கள்
  7. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை: ஆட்சியர் ஆலோசனை
  8. லைஃப்ஸ்டைல்
    மகிழ்ச்சி மந்திரங்கள்: வாழ்வை ரசிக்க வைக்கும் 23 எளிய சந்தோஷங்கள்
  9. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த தூக்கத்திற்கு இரவு வணக்கம்..!
  10. போளூர்
    மாட்டு வண்டி மீது பைக் மோதல்: அண்ணாமலையார் கோயில் ஊழியர் உயிரிழப்பு