நாகை: மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொண்டு நிறுவனம் நிவாரண உதவி

நாகை: மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு  தொண்டு நிறுவனம் நிவாரண உதவி
X

நாகையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை கலெக்டர் அருண் தம்புராஜ் வழங்கினார்.

நாகையில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வேர்ல்டு விஷன் தொண்டு நிறுவனம் சார்பாக நிவாரண உதவியை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்

நாகை மாவட்டத்தில் விடிய விடிய கனமழை கொட்டித்தீர்த்தது. இந்த நிலையில் நாகை மாவட்டம் கீழையூர் பகுதியை சேர்ந்த மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது. வேர்ல்டு விஷன் தனியார் தொண்டு நிறுவனம் நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 350 குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கினர்.

அரிசி, பருப்பு, மளிகை, எண்ணெய் உள்ளிட்ட ஒரு குடும்பத்திற்கு 2000 ரூபாய் மதிப்பிலான பொருட்களை நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்பு ராஜ் வழங்கினார். மொத்தம் 350 பயனாளிகளுக்கு 2 லட்சத்து 91ஆயிரத்து 740 ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருட்கள் வழங்கி இருப்பதாக வேர்ல்டு விஷன் நிறுவனத்தினர் தெரிவித்தனர்

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!