நாகை: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
நாகை மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் நெற்பயிர்களை கண்காணிப்பு அலுவலரிடம் காட்டினர்.
நாகை மாவட்டத்தில் கன மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கூடுதல் தலைமை செயலாளர் மற்றும் தமிழ்நாடு மின்விசை நிதி அடிப்படை மேம்பாட்டு நிறுவன தலைவரும், மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான அப்துல் மிஸ்ரா பார்வையிட்டு ஆய்வு செய்தார். திருப்பூண்டி பகுதியில் தண்ணீரில் மூழ்கியுள்ள இளம் சம்பா பயிர்களை பார்வையிட்ட அவர் பாதிப்புகள் குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தார். அப்போது கன மழை பெய்து மூன்று நாட்களாகியும் வயல்வெளிகள் மழைநீர் வடியாததற்கு வாய்க்கால்களில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றாதது தான் காரணம் என விவசாயிகள் வேதனையுடன் அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.
தொடர்ந்து அவர் வேட்டைக்காரனிருப்பு பகுதியில் நீரில் மூழ்கிய பயிர்களை பார்வையிட்டார் அப்போது விவசாயிகள் மூழ்கிய பயிர்களை எடுத்து அழுகிசேதமடைந்து இருப்பதை கண்ணீர் மல்க காண்பித்தனர். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா நாகை மாவட்டத்தில் மழை வெள்ளம் வடிவதற்கான அனைத்து பணிகளும் துரிதமாக செய்யப்பட்டு வருவதாகவும், மழை வெள்ள சேதங்கள் குறித்து விரைவில் கணக்கெடுக்கும் பணிகள் தொடங்கப்படும் எனவும் ஓரிரு நாட்கள் கழிந்த பின்னரே பயிர் சேதம் குறித்து தெரியவரும் பயிர் சேதம் குறித்த விபரங்கள் கணக்கெடுக்கப்பட்டு அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என்றார். இந்த ஆய்வின்போது நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu