நிஜத்திலும் இந்தியன் தாத்தாவாக மாறுவேன்-கமல்ஹாசன்

நிஜத்திலும் இந்தியன் தாத்தாவாக மாறுவேன்-கமல்ஹாசன்
X

ஊழல் செய்தால் நிஜத்திலும் இந்தியன் தாத்தாவாக மாறுவேன் என நாகப்பட்டினத்தில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் பேசினார்.

நாகப்பட்டினம் மாவட்டம் திருப்பூண்டி பகுதியில் கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் டாக்டர்.சித்துவை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய கமல்ஹாசன், திருப்பூண்டி என்பதற்கு பதிலாக திருத்துறைப்பூண்டி என்று மாற்றி கூறினார். பின்னர் கீழ்வேளூர் தொகுதி என்பதற்கு பதிலாக திருப்பூண்டி தொகுதி என்று மீண்டும் கமலஹாசன் மாற்றி கூறியதால், கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. இதனால் சுதாரித்துக்கொண்ட கமலஹாசன், மீண்டும் திருப்பூண்டி என ஊர் பெயரை சரியாக கூறி, வேட்பாளர் பெயரை சரியாக கூறி பேச்சை தொடங்கினார்.

பிரச்சாரத்தில் பேசிய கமல்ஹாசன், காவல்துறை ஏவல் துறையாக மாறிவிட்டதாக கடுமையாக விமர்சித்த அவர், தமிழகத்தில் ஊழல் ஆறு ஓடிக்கொண்டு இருப்பதாக கூறினார். அற்புதமான திட்டங்களை மக்கள் நீதி மய்யம் தீட்டி வைத்திருப்பதாக கூறிய கமல்ஹாசன், சினிமாவில் இந்தியன் தாத்தாவாக பெற்ற பிள்ளையை கொல்வதுபோல் என் வாழ்க்கையில், நிஜத்திலும் ஊழல் செய்தால் பெற்ற பிள்ளையை கொன்றுவிடுவேன் என்று ஆவேசமாக பேசினார். தொடர்ந்து நாகை அபிராமி சன்னதி திடலில் பிரச்சாரம் மேற்கொண்ட கமல்ஹாசன், மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் பட்டுகோட்டை புறப்பட்டு சென்றார்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!