சுனாமி குடியிருப்பு பயனாளிகளுக்கு பட்டா வழங்கிய அமைச்சர் மெய்யநாதன்

சுனாமி குடியிருப்பு பயனாளிகளுக்கு பட்டா வழங்கிய அமைச்சர் மெய்யநாதன்
X

வேளாங்கண்ணியில் 249 சுனாமி குடியிருப்புகளுக்கு வீட்டுமனை பட்டாக்களை,  சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார்.

சுனாமியால் பாதிக்கப்பட்ட 249 சுனாமி குடியிருப்பு பயனாளிகளுக்கு பட்டாக்களை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார்.

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பகுதியில், சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, பூக்காரத் தெரு பகுதியில் 72 வீடுகளும், செட்டி தெரு பகுதியில் 177 வீடுகளும் தமிழக அரசால் வழங்கப்பட்டது.

இந்த வீடுகளுக்கான வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தலைமையில் வேளாங்கண்ணியில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பூக்காரத் தெரு மற்றும் செட்டி தெரு பகுதியை சேர்ந்த 249 பயனாளிகளுக்கு, இலவச வீட்டு மனை பட்டாவை, தமிழக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற துறை அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார். நிகழ்ச்சியில் தமிழ்நாடு மீன் வளர்ச்சிக்கழக தலைவர் கௌதமன் மற்றும் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்