நாகை: முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு உணவு, நிவாரண உதவி
முகாம்களில் தங்கி இருப்பவர்களுக்கு அமைச்சர் மெய்யநாதன் உணவு வழங்கினார்.
நாகை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக 10 முகாம்களில் சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் நாகை அடுத்துள்ள பாப்பாக்கோவில் பகுதியில் முகாமில் தங்கவைக்கபட்டுள்ள பொதுமக்களை தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
முகாமில், தங்கவைக்கப்பட்டுள்ள சமத்துவபுரம், சின்னநரியங்குடி, கருவேளி உள்ளிட்ட பகுதி மக்களுக்கு உணவு வழங்கிய அமைச்சர், பால், தார்ப்பாய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினார். அப்போது கனமழை நேரத்தில் சிறப்பாக பணியாற்றிய பாப்பாக்கோவில் கிராம நிர்வாக அலுவலர் சபரிநாதனுக்கு அமைச்சர் மெய்யநாதன் பாராட்டு தெரிவித்து சான்றிதழ் வழங்கினார்.
தொடர்ந்து, அங்கு நடைபெற்ற மருத்துவ முகாமை பார்வையிட்ட அமைச்சர், சரியான நேரத்தில் பொதுமக்களுக்கு மூன்று வேளையும் உணவு சென்றடைவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.
அமைச்சருடன் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் மற்றும் அதிகாரிகள் சென்றிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu