நாகை மாவட்டத்தில் கன மழையால் 1000 ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்

நாகை மாவட்டத்தில்  கன மழையால் 1000 ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்
X

நாகை மாவட்டத்தில் பெய்த மழையால் ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் அடைந்தன.

நாகை அருகே பருவம் தவறிய கன மழையால் பாதிக்கப்பட்ட 1000 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளன.

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த பிரதாபராமபுரம் ஊராட்சி கழுவன்குளம்,ஏரிக்கரை சந்திரநதி, கைகாட்டி உள்ளிட்ட பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த சுமார் ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான கோ46 வகை சம்பா நெல் பயிர் அறுவடைக்குத் தயாராகி வந்தது. இன்னும் 10 நாட்களில் இயந்திரம் மூலமாக அறுவடை செய்யப்பட உள்ள நிலையில் தற்பொழுது பருவம் தவறி பெய்த மழையால், வயலில் தண்ணீர் தேங்கியுள்ளது.

மேலும் தொடர் மழையால் நெல்லின் பாரம் தாங்காமல் வயலில் சாய்ந்து தற்பொழுது நீரில் மூழ்கியுள்ளது. மழை தணிந்து இரண்டு நாட்களான நிலையிலும் வயல்களில் இருந்து மழை நீர் வடியாததால் நெல்மணிகள் முளைக்கத் தொடங்கி இருப்பதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரடி ஆய்வு மேற்கொண்டு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags

Next Story