தூர்வாரும் பணிகளில் முறைக்கேடு தடுக்க, உழவர் குழுவை கலெக்டர் அமைத்தார்

தூர்வாரும் பணிகளில் முறைக்கேடு  தடுக்க, உழவர் குழுவை கலெக்டர் அமைத்தார்
X

நாகப்பட்டினம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் தூர் வாரும் பணி

நாகப்பட்டினம் மாவட்டத்தில் தூர் வாரும் பணிகளில் நடக்கும் முறைக்கேடுகளை தடுக்க கலெக்டர் பிரவீன் நாயர் உழவர் குழுவை அமைத்தார்.

நாகை மாவட்டத்தில் ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட உள்ளதால், வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

85 பணிகளாக பிரிக்கப்பட்டு 545 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்கும் வகையில் 90 வாகன இயந்திரங்கள் மூலம் இரவு பகலாக ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் தூர்வாரும் பணிகளில் முறைகேடு நடப்பதை கண்காணிக்க உழவர் குழு இன்று முதல் அமைத்து நாகை மாவட்ட ஆட்சியர் பிரவின் நாயர் உத்தரவிட்டுள்ளார்.

கிராமங்களில் உள்ள விவசாய பிரதிநிதிகள் தலைமையில் குழு அமைக்கப்பட்டு இருப்பதால், தூர்வாரும் பணிகளில் முறைகேடு ஏற்பட்டால், விவசாயிகள் மூலமாக அறிய முடியும் என்றும், எந்த புகாராக இருந்தாலும் விவசாயிகள் தெரிவிக்க முன் வரவேண்டும் என்று நாகை மாவட்ட ஆட்சியர் பிரவின் நாயர் தெரிவித்துள்ளார்.

மேலும், குறுவை சாகுபடிக்கு விவசாயிகளுக்கு தேவையான உரம், விதை போதுமான அளவு கையிருப்பு இருப்பதாகவும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story