நாம் தமிழர் கட்சிக்கு தேர்தல் ஆணைய அங்கீகாரம்..!

நாம் தமிழர் கட்சிக்கு தேர்தல் ஆணைய அங்கீகாரம்..!
X

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் (கோப்பு படம்)

உலக தமிழர்கள் மத்தியில் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்த நாம் தமிழர் கட்சி. சீமான் தம்பிகளின் உழைப்பை இது பிரதிபலிக்கிறது.

Naam Tamiar Katchi, Election Commission of India, Election Commission Recognition

சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி, 2019ம் ஆண்டில் 3.85 சதவீத வாக்குகள் பெற்றிருந்தது. ஆனால் இந்த 2024ம் ஆண்டு தேர்தலில் மிகப்பெரிய பங்களிப்பைப்பெற்று 8.2 சதவீதமாக அதிகரித்திருப்பதுடன் தமிழக அரசியலில் முக்கிய பங்கு வகிக்கும் முக்கிய கட்சியாக உருவெடுத்துள்ளது. இதை நாம் சாதாரணமாக எடுத்துக்கொள்ளமுடியாது.

Naam Tamiar Katchi,

இது கட்சியினரின் முயற்சிக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி.மேலும், அக்கட்சி 6 தொகுதிகளில் பாஜக தலைமையிலான கூட்டணியை 5 இடங்களிலும், அதிமுகவை ஒரு தொகுதியிலும் (கன்னியாகுமரி) முந்தி மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. 12 தொகுதிகளில் அக்கட்சி ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஒற்றை ரூபாய் செலவில்லாத உண்மை வாக்குகள்

நாம் தமிழர் கட்சிக்கு ஊடகங்கள் ஆதரவு இல்லை. பணபலம் இல்லை. நடிகர்கள் அல்லது பெரிய அரசியல் அறிந்த பெரிய ஆளுமைகள் இல்லை. அறியப்படாத சின்னம். திமுகவின் உதய சூரியன் சின்னம் பல ஆண்டுகளாக பலரும் அறிந்த சின்னம். அதிமுகவின் இரட்டை இல்லை சின்னம் எம்ஜிஆர் காலத்தில் இருந்த அறியப்பட்ட சின்னம். பாஜகவின் தாமரை சின்னமும் எல்லோருக்கும் அறிந்த சின்னம்.

Naam Tamiar Katchi,

ஆனால், நாம் தமிழர் கட்சிக்கு கொடுக்கப்பட்ட மைக் சின்னத்தி குறைந்த நாட்களில் தமிழகம் முழுவதும் கொண்டு சேர்ப்பதில் அவர்களின் ஐடி விங் தீவிரமாக உழைத்தனர். ஊடகங்கள் நாம் தமிழர் கட்சியை பரிதாக் ஹை லைட் செய்வதில்லை. இத்தனை இடையூறுகளுக்கு மத்தியிலும் சின்னத்தை கொண்டு சேர்த்தனர். குறிப்பாக சீமான் மட்டுமே தமிழகம் முழுவதும் சுற்றி தனது தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டார்.

Naam Tamiar Katchi,

மதிப்புக்க வாக்குகள்

எந்த செலவும் இல்லாமல், பெரிய பின்புலம் இல்லாமல், அறியப்படாத சின்னத்தை வைத்துக்கொண்டு அவர்கள் பெற்ற ஒவ்வொரு வாக்குகளும் மதிப்புக்குரியவை. அத்தனையும் வைரங்கள். சீமான் தம்பிகள் என்று கேலியாக கூறப்பட்டாலும் அந்த சீமான் தம்பிகளின் உழைப்பும் முயற்சியும் வீண் போகவில்லை.

மற்ற கட்சிகளுடன் ஒப்பிடும்போது சீமான் மற்றும் பிற ஆதாரங்களைத் தவிர கட்சிக்கு பிரசாரம் செய்ய நடிகைகள் கிடையாது, நடிகர்கள் கிடையாது, உயர்தர பேச்சாளர்கள் கிடையாது. இவையெல்லாம் கிடையாது என்றாலும் அவர்களிடம் இருந்த ஒன்று உழைப்பும் முயற்சியும். அவர்களின் செயல்திறன் முக்கியமாக கவனிக்கப்படவேண்டிய ஒன்றாகும்.

இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி முன்பு பயன்படுத்திய சின்னத்தை தேர்தல் ஆணையத்திடம் பெறாததால் புதிய சின்னத்தில் போட்டியிட வேண்டியதாயிற்று.

Naam Tamiar Katchi,

ஈரோடு, கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, நாகப்பட்டினம், திருச்சி மற்றும் புதுச்சேரி ஆகிய ஆறு தொகுதிகளில் மூன்றாவது இடத்தைப் பிடித்தது. சிவகங்கையில் அக்கட்சியின் எழிலரசு 1,63,412 வாக்குகள் (15.5%) பெற்றதே நாம் தமிழர் கட்சியின் உழைப்புக்கு கிடைத்த சிறந்த சான்றாகும்.

கன்னியாகுமரியைத் தவிர 39 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி பெற்ற வாக்குகள் இருமடங்காக அதிகரித்துள்ளன. கட்சியின் வளர்ச்சி குறித்து மூத்த அரசியல் பார்வையாளர்கள் கூறும்போது இது அசாத்திய வளர்ச்சி. அவர்களின் முயற்சியும் உழைப்பும் பாராட்டுக்குரியது என்று பொதுவான கருத்தை வலியுறுத்தி கூறினர்.

பல கட்சிகள் தங்கள் வாக்குச் சதவீதத்தை தக்கவைப்பதற்கு போராடிக்கொண்டிருந்தபோது, நாம் தமிழர் கட்சி குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டியுள்ளது. எந்த ஒரு பிரதம வேட்பாளரும், நட்சத்திரப் பேச்சாளர்களும் ஊடக ஆதரவும் இல்லாமல் சீமானை மட்டுமே நம்பி அந்த கட்சி குறிப்பிடத்தக்க வாக்குச் சதவீதத்தைப் பெற்றுள்ளது. எனவே, வரவிருக்கும் எந்த தேர்தலிலும் மாநிலத்தில் உள்ள பெரிய திராவிட கட்சிகளுக்கும் மற்றும் தேசிய கட்சிகளுக்கும் நாம் தமிழர் கட்சி குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது.

தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதை மறுப்பதற்கில்லை.

Naam Tamiar Katchi,

தேர்தல் ஆணைய அங்கீகாரம்

ஒரு அரசியல் கட்சி தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெறுவதற்கு 8 சதவீத வாக்குகளை பெற்றிருக்க வேண்டும். நடத்ந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் ஒட்டுமொத்த வாக்குகளின் அடிப்படையில் 8.19 சதவீதத்தை பெற்றுள்ளது. தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெறுவதற்கான சதவீதத்தை நாம் தமிழர் கட்சி பெற்றுள்ளதால், நாம் தமிழர் கட்சி தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெறுவதில் எந்த சிக்கலும் இருக்கப்போவதில்லை.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா