விழுப்புரம், ராமநாதபுரத்தில் ரூ.10 கோடியில் அருங்காட்சியகம்: பட்ஜெட் அறிவிப்பு
பைல் படம்.
தமிழக பட்ஜெட் உரையில் அவர் வெளியிட்டுள்ள அறிவிப்புகள் வருமாறு: சமூக ஊடகங்களில் தவறான செய்திகள், பிரசாரங்களை கண்காணித்து தடுக்க, சமூக ஊடக சிறப்பு மையம் அமைக்கப்படும்.
அனைத்து தளங்களிலும் சமூக நீதியை நிலை நாட்டுவதில் தொடர்ந்து உறுதியாக இருக்கிறோம். தொல்லியல் ஆய்வுகளுக்காக ரூ.7 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 7 இடங்களில் அகழாய்வு, 2 இடங்களில் தல ஆய்வு செய்யப்படும்.
விழுப்புரம், ராமநாதபுரத்தில் ரூ.10 கோடி செலவில் அருங்காட்சியகம் அமைக்கப்படும். நவீன முறையில் நில அளவை பணிகளை மேற்கொள்ள ரோவர் இயந்திரம் வாங்க ரூ.15 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அரசின் உதவி பெறாத தமிழ் வழியில் கற்பிக்கும் பள்ளிகளுக்கு ரூ.15 கோடி செலவில் பாட புத்தகங்கள் வழங்கப்படும்.
தமிழ் மொழி குறித்த ஆய்வுக்காக ரூ.2 கோடி ஒதுக்கீடு. தமிழ் மற்றும் இந்தோ - ஐரோப்பிய மொழிகள் தொடர்பு குறித்து ஆய்வு செய்யப்படும். ரூ. 5 கோடியில் பெரியாரின் சிந்தனை நூல்கள், 21 மொழிகளில் வெளியிடப்படும். இவ்வாறு நிதி அமைச்சர் அறிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu