திடீர் நெஞ்சுவலி: அமைச்சர் செந்தில் பாலாஜி ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதி

திடீர் நெஞ்சுவலி: அமைச்சர் செந்தில் பாலாஜி ஸ்டான்லி  மருத்துவமனையில் அனுமதி
X

அமைச்சர் செந்தில் பாலாஜி 

புழல் சிறையில் இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜி, திடீர் நெஞ்சுவலி காரணமாக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் 15-ஆம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது செந்தில் பாலாஜியின் மீதான வழக்கு எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த வழக்கில் ஜாமீன் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் அவரது ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் அக்டோபர் 13ம் தேதி வரை நீடிக்கப்பட்டது.

இந்த நிலையில், இன்று காலை 6 மணியளவில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு உள்ளது. அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால், அவர் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

Tags

Next Story