ஞாயிற்றுக்கிழமைகளில் ஊரடங்கு தொடருமா? அமைச்சர் வெளியிட்ட புதுதகவல்
தமிழ்நாடு அரசின் சார்பில், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 126-வது பிறந்தநாளையொட்டி, சென்னை மெரினா கடற்கரை காமராசர் சாலையில் அமைந்துள்ள நேதாஜி திருவுருவச்சிலைக்கு கீழ் வைக்கப்பட்டு இருந்த, அவரது படத்திற்கு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர், அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது: ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கிற்கு, தமிழக மக்கள் சிறப்பாக ஒத்துழைப்பு தருகிறார்கள். சென்னையில் கொரோனா தொற்று குறைவது ஆறுதலாக இருக்கிறது. கொரோனா தொற்றால் இறந்தவர்கள் தடுப்பூசி போட்டுகொள்ளாதவர்கள், வயது முதிர்ந்தவர்கள், இணை நோய் உள்ளவர்கள்தான். அதனால் தான் 95 சதவீதம் இறப்பு விகிதம் உள்ளது.
கொரோனா தொற்று நிலையை கருத்தில் கொண்டு, வரும் வாரங்களில், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு இருக்குமா என்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் முடிவெடுப்பார். மேலும், கொரோனா தொற்று குறைந்தால் வரும் நாட்களில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு இருக்காது என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu