பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர்களுடன் அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு
தலைமைச்செயலகத்தில். பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு தலைமையில், பொதுப்பணித் துறை அலுவலர்களின் செயல்பாடுகள் மற்றும் துறை சார்ந்த திட்டங்கள் செயல்படுத்தப்படுவது தொடர்பாக பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வின் போது முதன்மைத் தலைமைப்பொறியாளர் விஸ்வநாத், தலைமைப்பொறியாளர் ராமச்சந்திரன், துணைத் தலைமைப் பொறியாளர் இளஞ்செழியன் மற்றும் துறை உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
பொதுப்பணித்துறையின் பல்வேறு அறிவிப்புகள், அதனை செயல்படுத்திய விபரம், நிலுவையிலுள்ள திட்டங்களை தலைமைச் செயலகத்தில் பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.
திட்டங்கள், விரைவுப்படுத்த வேண்டியது தொடர்பாக இன்று காலையில் பொதுப்பணித்துறை உயர் அலுவலர்கள் துறை சார்ந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டவை, நிலுவையிலுள்ளவையின் விபரங்களை அமைச்சரிடம் எடுத்துரைத்தார்கள். இந்த ஆண்டு சட்டப் பேரவையில் அறிவித்த திட்டங்களில் ஆணை பிறப்பிக்கப்பட்டவை, ஆணை பிறப்பிக்கப்பட வேண்டியது அனைத்தும் விபரமாக கேட்டறிந்தார் அமைச்சர். இத்திட்டங்களை உடனடியாக ஆணை பிறப்பித்து பொது மக்களின் பயன்படுத்த தக்க வகையில் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்கள் இதைப்போல, மதுரையில் கட்டப்பட்டு வரும் கலைஞர் நினைவு நூலகம் மற்றும் கலைஞர் நினைவிடம் ஆகியவற்றின் பணிகள் துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என்றும், இதில் எந்த பணியிலும் காலதாமதம் இருக்க கூடாது என்று அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின் போது விஸ்வநாத் முதன்மைத் தலைமைப் பொறியாளர், தலைமைப் பொறியாளர் ராமச்சந்திரன், தலைமைக் கட்டிட கலைஞர் மைக்கேல், துணை தலைமைப் பொறியாளர் இளஞ்செழியன் மற்றும் கண்காணிப்புப் பொறியாளர் கல்யாண சுந்தரம் ஆகியோர் பங்குப் பெற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu