10, 11, 12 ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு
Public Examination Schedule- தேர்வு அட்டவணையை வெளியிட்ட அமைச்சர் அன்பில் மகேஷ்
Public Examination Schedule, Published at Coimbatore- பள்ளி கல்வித்துறை சார்பில் 10ம் வகுப்பு,11ம் வகுப்பு, 12ம் வகுப்புகளுக்கு பொது தேர்வுக்கான அட்டவணையினை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெளியிட்டார். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அவர், பருவ மழையை பொறுத்தவரை முதல்வரும், துணை முதல்வரும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர் என தெரிவித்தார். மழை பாதிப்பு இருந்தால் விடுமுறையா ? இல்லையா என்பது அனைவரின் கேள்வியாக இருக்கின்றது.
மாவட்டங்களில் மழை பாதிப்பு இருந்தால் அந்தந்த மாவட்ட ஆட்சித்தலைவர், பேரிடர் மேலாண்மை துறையுடன் இணைத்து இருப்பார்கள், விடுமுறை அறிவிப்பை மாவட்ட ஆட்சியர்களே வெளியிடுவார்கள் என தெரிவித்தார்.பள்ளிகல்வித்துறை மீது இந்த அரசு அதிக அக்கறையுடன இருக்கின்றது எனவும், இந்த துறைக்காக 44042 கோடி ரூபாயினை இந்த அரசு ஒதுக்கி இருக்கிறது என்றார். அட்டவணை வெளியிட்ட பின்பு அதற்கு ஏற்ப மாணவர்கள் தயாராகி கொள்ள வேண்டும் எனவும், பொது தேர்வை பதற்றம் இல்லாமல் எழுத வேண்டும் என்றார்.
12 ம் வகுப்பு செய்முறைதேர்வுகள் பிப் 7 முதல் பிப் 14 வரை நடைபெறும் என தெரிவித்தார். 11 ம் வகுப்பு செய்முறை தேர்வுகள் பிப் 15 முதல் 21 ம் தேதி வரை நடைபெறும் என தெரிவித்தார். 10 ம் வகுப்பு செய்முறை தேர்வுகள் பிப் 22 முதல் பிப் 28ம் தேதி வரை நடைபெறும் என தெரிவித்தார்.12 ம் வகுப்புக்கு மார்ச் 3 ம் தேதி முதல் 25 ம் தேதி வரை நடைபெறும் என தெரிவித்தார்.11 ம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 5 ம் தேதி முதல் மார்ச் 27ம் தேதி வரை நடைபெறும் என தெரிவித்தார். 10 ம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 28 ம் தேதி முதல் ஏப்ரல் 15 வரை நடைபெறும் என தெரிவித்தார்.12 ம் வகுப்பு ரிசல்ட் மே 9 ம் தேதியும்,11 ம் வகுப்பு ரிசல்ட் மே 19 ம் தேதியும்,10 ம் வகுப்பு ரிசல்ட் மே 19 தேதியும் அறிவிக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
தமிழகத்திற்கு பள்ளி கல்வி துறைக்கு SSA திட்டத்தின் கீழ் கொடுக்க வேண்டிய தொகையினை, மத்திய அரசு கொடுக்க வில்லை என தெரிவித்தார். மத்திய அரசு பல்வேறு காரணங்களை சொல்லி தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய நிதியை நிறுத்தக்கூடாது என மத்திய அரசிடம் வலியுறுத்தி வருகிறோம் எனவும், அந்த முயற்சி கைவிடப்படவில்லை என்றார். 27 வகையான நடவடிக்கைகள் SSA நிதி மூலம் செய்யப்பட்டு வருவதாகவும், இந்த நிதி நிறுத்தப்படுவதால் இது தொடர்பான நடவடிக்கைகள் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்தார். திடீரென அந்தப் பணத்தில் மத்திய அரசு கை வைக்கின்றனர் என கூறினார்.
மத்திய அரசின் 20 விதிமுறைகளை முறையாக பின்பற்றும் மாநிலம் தமிழகம் எனவும், பிற மாநிலங்களுக்கு தமிழகம் எடுத்துக்காட்டாக இருக்கின்றது என தெரிவித்தார். சிறப்பாக செயல்படும் தமிழகத்திற்கு SSA நிதி வரவிடாமல் மத்திய அரசு தடுக்கின்றது என தெரிவித்தார். தமிழக முதல்வர் அதிக நிதியினை பள்ளி கல்வித்துறைக்கு ஒதுக்கீடு செய்கின்றார் எனவும் தெரிவித்தார்.சிதிலமடைந்த பள்ளி கட்டிடங்கள் பட்டியல் எடுக்கப்பட்டு, பேராசிரியர் அன்பழகன் திட்டம்மூலம் 3500 வகுப்பறைகள் வரை கட்டப்பட்டு இருக்கின்றது.
தேவைபடும் இடங்களில் கட்டிடங்கள் கட்டப்படும் எனவும், மாணவர்கள் மரத்தடியில் உட்கார்ந்து படிக்க கூடாது என்பதில் உறுதியாக இருக்கின்றோம்,அதே வேளையில் சிதிலமடைந்த கட்டிடத்திலும் மாணவர்கள் படிக்க கூடாது என உறுதியாக இருக்கின்றோம் என தெரிவித்தார்.சிறப்பாக செயல்படும் மாநிலமாக தமிழகம் இருக்கும் பொது, மும்மொழி கொள்கையினை ஏற்க வேண்டும் என அழுத்தம் கொடுக்கின்றனர் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu