5 திருக்கோயில்களில் மருத்துவ மையங்கள்: முதல்வர் திறந்து வைப்பு

5 திருக்கோயில்களில் மருத்துவ மையங்கள்: முதல்வர் திறந்து வைப்பு
X

பக்தர்கள் அதிகம் வரும் 5 திருக்கோயில்களில் மருத்துவ மையங்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

பக்தர்கள் அதிகம் வரும் 5 திருக்கோயில்களில் மருத்துவ மையங்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

பக்தர்கள் அதிகம் வரும் 5 திருக்கோயில்களில் மருத்துவ மையங்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று, இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை சார்பில் மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில், இருக்கன்குடி – அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், பண்ணாரி அருள்மிகு பண்ணாரியம்மன் திருக்கோயில், மதுரை - அழகர்கோவில், அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில், சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயணசுவாமி

திருக்கோயில் ஆகிய 5 திருக்கோயில்களில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மருத்துவ மையங்களை காணொலிக் காட்சி வாயிலாக தமிழக முதல்வர் திறந்து வைத்தார்.

2021-22ஆம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறையின் மானியக் கோரிக்கையில், பக்தர்கள் அதிகளவில் வருகை புரியும் 10 திருக்கோயில்களில் தேவையான மருத்துவர் மற்றும் மருத்துவப் பணியாளர்களுடன் கூடிய முதலுதவி மருத்துவ மையங்கள் ஏற்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, முதற்கட்டமாக, திருச்செந்தூர் - அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேசுவரர் திருக்கோயில், மேல்மலையனூர் – அருள்மிகு அங்காள பரமேஸ்வரி திருக்கோயில், சோளிங்கர்- அருள்மிகு இலட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில், மருதமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், திருத்தணி - அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஆகிய திருக்கோயில்களில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ மையங்கள் மற்றும் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் மேம்படுத்தப்பட்ட மருத்துவ மையம் ஆகியவற்றை முதல்வர் கடந்த 31.12.2021 அன்று காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து இராமேசுவரம் – அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயில், திருவரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் ஆகிய 3 திருக்கோயில்களில் மருத்துவ மையங்கள் திறந்து வைக்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து, 2022-23ஆம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறையின் மானியக் கோரிக்கையில், "பக்தர்கள் அதிகளவில் வருகை புரியும் 10 திருக்கோயில்களில் மருத்துவ மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்தாண்டு மேலும் 5 திருக்கோயில்களில் மருத்துவ மையங்கள் புதிதாக அமைக்கப்படும்" என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, மதுரை- அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில், இருக்கன்குடி- அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், பண்ணாரி அருள்மிகு பண்ணாரியம்மன் திருக்கோயில், மதுரை அழகர்கோவில், அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில், சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயணசுவாமி திருக்கோயில் ஆகிய 5 திருக்கோயில்களில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மருத்துவ மையங்களை காணொலிக் காட்சி வாயிலாக முதல்வர் இன்று திறந்து வைத்தார்.

இந்த மருத்துவ மையங்களில் பணியாற்றிட தகுதியான மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட்டுள்ளனர். முதலுதவி மற்றும் அடிப்படை சிகிச்சை மேற்கொள்வதற்கு தேவையான ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், இரத்த அழுத்தமானி, படுக்கைகள், உயிர்காக்கும் மருந்துகள் போன்ற அனைத்து அடிப்படை வசதிகளும் உள்ளன. இதனால் திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு அவசர மருத்துவ உதவி தேவைப்படும் நேரத்தில் பேருதவியாக இருக்கும். இதற்கான செலவினங்கள் அந்தந்த திருக்கோயிலின் நிதியிலிருந்து மேற்கொள்ளப்படும்.

இந்த நிகழ்ச்சியில், தலைமைச் செயலகத்திலிருந்து மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, தலைமைச் செயலாளர் இறையன்பு, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.சந்தரமோகன், இந்துசமய அறநிலையத் துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன், கூடுதல் ஆணையர் இரா.கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மதுரை, விருதுநகர், ஈரோடு, தென்காசி ஆகிய மாவட்டங்களிலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன், சட்டமன்ற உறுப்பினர்கள் கோ. தளபதி, . எம். பூமிநாதன், இ. ராஜா, மதுரை மாநகராட்சி மேயர் வி. இந்திராணி, மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் மரு. எஸ். அனீஷ் சேகர், விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெ.மேகநாத ரெட்டி, ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி, தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகாஷ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு