ஆதார் சேவை மையத்தில் போதிய ஊழியர்கள் இல்லாததால் முதியோர் மற்றும் மகளிர் அவதி

ஆதார் சேவை மையத்தில் போதிய ஊழியர்கள் இல்லாததால்  முதியோர் மற்றும் மகளிர் அவதி
X
சீர்காழி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் அரசு ஆதார் சேவை மையம் ஊழியர் பற்றாக்குறையால் மக்கள் அவதி

சீர்காழி ஆதார் சேவை மையத்தில் போதிய ஊழியர்கள் இல்லாததால் மூன்று நாட்கள் வரை முதியோர் மற்றும் மகளிர் அலையும் அவலநிலை தொடர்வதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்..

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் அரசு ஆதார் சேவை மையம் இயங்கி வருகிறது.நாள் ஒன்றுக்கு நூற்றுக்கணக்காணோர் வந்து செல்கின்றனர். ஆனால், இங்கு போதிய எண்ணிக்கையில் ஊழியர்கள் இல்லாததால் பொதுமக்கள் மணிக்கணக்கில் காத்துக்கிடக்கும் நிலை உள்ளது. மேலும், இணைய சேவை குறைபாடு மற்றுந் ஒரு கணினி மட்டுமே இயங்குவதால் நாள் முழுவதும் காத்திருந்தாலும் பணிகள் முடிவடையாத நிலை உள்ளது.

இரண்டு மூன்று நாட்கள் அலைந்துதான் ஆதார் சேவை மற்றும் திருத்தங்களை செய்ய முடிவதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இதனால் கிராம புறங்களில் இருந்து வருபவர்கள், முதியோர், மகளிர் கடும் சிரமத்துக்குள்ளா கின்றனர்.ச மூக இடைவெளியின்றியும் முககவசம் இன்றியும் கூட்டமாக நிற்கின்றனர். வெய்யிலிலும் திறந்த வெளியில் காத்துகிடக்கும் நிலையை மாற்ற வேண்டும். மாவட்ட நிர்வாகம் கூடுதல் ஊழியர்களை நியமித்து டோக்கன் முறையை அமல்படுத்தவும் கொரோனா கட்டுப்பாடுகளை செயல்படுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!