சீர்காழி அருகே பணமங்கலத்தில் தேவாலயம் அமைப்பதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு
சீர்காழி அருகே பணமங்கலம் கிராமத்தில் கிறிஸ்தவ ஆலயம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி புறவழிச்சாலையில் அமைந்துள்ள பண மங்கலம் கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் தேவாலயம் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டதாக கூறப்படுகிறது.
கிறிஸ்தவர்களே இல்லாத கிராமத்தில் தேவாலயம் அமைக்கப்பட்டு வருவது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து முன்னறிவிப்பின்றி தேவாலயம் அமைக்கும் பணியை தொடங்குவதாக கூறியும்,பணியை உடனே நிறுத்த வலியுறுத்தியும் எதிர்ப்பு தெரிவித்து கண்டன கோஷங்களை எழுப்பி பணமங்கலம் கிராம மக்கள்,இந்து முன்னனி மற்றும் பா.ஜ.க வினர். ஊர்வமாக வந்தனர்.
அப்போது அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் அவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.மேலும் தனியார் இடத்தில் நடைபெறும் தேவாலய பணியை தடுக்கவோ? போராட்டம் நடத்தவோ? அனுமதி இல்லை என்றும் சட்ட ரீதியாக தீர்வு காணவும் அறிவுறுத்தினர்.அதனை ஏற்று கிராமமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu