சீர்காழி அருகே பட்டவிளாகம்- ஓலையாம்புத்தூர் சாலையை சீரமைக்க மக்கள் கோரிக்கை

சீர்காழி அருகே பட்டவிளாகம்- ஓலையாம்புத்தூர் சாலையை சீரமைக்க   மக்கள் கோரிக்கை
X
இந்த சாலையை கடந்து வர முடியாமல் மூன்று கிலோமீட்டர் சுற்றியே தங்கள் கிராமங்களுக்கு சென்றடைகின்றனர்

சீர்காழி அருகே பட்டவிளாகம் முதல் ஓலையாம்புத்தூர் வரையிலான உள் கிராம இணைப்புச் சாலை பழுது மூன்று கிலோமீட்டர் சுற்றி செல்லும் அவலம் விரைந்து சீரமைக்க அரசு கிராம மக்கள் கோரிக்கை.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியை அடுத்த பட்டவிளாகம் கிராமத்தில் இருந்து ஓலையாம்புத்தூர் கிராமத்துக்குச் செல்லும் உள் கிராம இணைப்புச் சாலை கடந்த 3 ஆண்டுகளாக பராமரிப்பின்றி பழுதடைந்துள்ளது. இதனால் இரண்டு கிராமங்களை சேர்ந்த மக்கள் சீர்காழி நகர் பகுதிக்கு வந்து செல்வதற்கு மூன்று கிலோமீட்டர் வரும் சுற்றிச் செல்லும் அவல நிலைக்கு ஆளாகியுள்ளனர.

ஜல்லிக்கற்களின் குவியலாக காட்சியளிக்கும் சாலையை சீரமைக்க கோரி பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.சாலை பழுதடைந்துள்ளதால் பள்ளி கல்லூரி,மாணவர்கள் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கு நகர பகுதிக்கு செல்வோர் நேர விரையத்தால் பாதிக்கப்படுகின்றனர்.குறிப்பாக இரவு நேரங்களில், இந்த சாலையை கடந்து வர முடியாமல் மூன்று கிலோமீட்டர் சுற்றியே தங்கள் கிராமங்களுக்கு சென்றடைகின்றனர். எனவே பழுதடைந்துள்ள பட்டவிளாகம் - ஓலையாம்புத்தூர் கிராம சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!