மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெளிட்ட வீடியோ: சமூக வலைதளத்தில் வைரல்
10 வயதிலேயே பேஸ்புக் பயன்படுத்தும் குழந்தைகள் தவறான பாதைக்கு செல்ல வழிவகுக்கும் இன்றைய காலகட்டத்தில் பொதுமக்கள் சைபர்கிரைம் குற்றங்களிலிருந்து தங்களையும் தங்கள் குழந்தைகளையும் பாதுகாத்துகொள்ள அறிவுறுத்தி மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சமூக வலைதளத்தில் வெளிட்ட வீடியோ வைரல்:-
தொழில்நுட்ப வளர்ச்சி எந்த அளவுக்கு கைகொடுக்கிறதோ அந்த அளவுக்கு ஆபத்தும் இருக்கிறது. கம்ப்யூட்டர், இணையம் போன்றவற்றில் நடைபெறும் குற்றங்கள் சைபர் கிரைம் என்று அழைக்கப்படுகிறது. சைபர் கிரைம் குற்றமான ஆன்லைன் மோசடியிலிருந்து பொதுமக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வீடியோ பதிவை மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் வகுப்புகள் வாயிலாக கல்வி பயிலும் மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாதுகாப்பாக இணைய தளங்களை கையாள வேண்டும், சைபர் கிரைம் குற்றங்கள் என்றால் என்ன என்று ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டும், ஒருவர் அனுமதி இல்லாமல் (Wi-Fi) பயன்படுத்துவது தவறானது. ஹேக்கிங் தவறானது என்பது பெரும்பாலனவர்களுக்கு தெரிவதில்லை. சிறுவர்கள் 10 வயதிலேயே ஹேக்கிங் பற்றி அறிந்துள்ளனர்.
பெற்றோர்கள் குழந்தைகள் செய்யும் தவறை ஊக்குவிக்க கூடாது. குழந்தைகள் செய்வது தவறு என்று கூட தெரியாமல் பெற்றொர்கள் ஊக்கப்படுத்தும் நிலையிலேயே உள்ளனர். புதிதாக செல்போன் மற்றும் இன்டர்நெட் பயன்படுத்துபவர்கள்; எதைபதிவிட வேண்டும், எதை பதிவிடக்கூடாது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். 18 வயதுக்குமேல் உள்ளவர்கள் தான் பேஸ்புக் பயன்படுத்த வேண்டும் ஆனால் 10 வயதிலேயே சிறுவர்கள் தங்கள் வயதை மிகைப்படுத்தி காண்பித்து பேஸ்புக் பயன்படுத்துகின்றனர்.
இதனால் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் பார்க்கக்கூடிய விளம்பரம் உள்ளிட்ட தவறான பதிவுகளை 10 வயதிலேயே பார்ப்பதால் அதிகஅளவில் தவறுகள் எற்படுகிறது. ஜிடிஏ, பப்ஜி போன்ற விளையாட்டுகளை பார்த்து நிஜ வாழ்க்கையில் செயல்படுத்தினால் சிறை தண்டனை கிடைக்கும், வாழ்க்கை சீரழியும். சோசியல் மீடியாவில் லைக்குகளை பெறுவதற்காக பதிவிடுவதை தவிர்க்க வேண்டும், முகம்தெரியாத நபர்களிடம் நட்பை ஏற்படுத்தி கொள்ள கூடாது, தெரியாத பதிவுகளை அக்சஸ் செய்யகூடாது. இணையத்தை பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுகொண்டுள்ளார். இந்த பயனுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பொதுமக்களின் வரவேற்பை பெற்றுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu