மயிலாடுதுறையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்.
மயிலாடுதுறையில் விசிக ஆர்ப்பாட்டம்
செம்பனார்கோவில் ஒன்றியம் நரசிங்கநத்தம் கிராமத்தில் நரசிங்கநத்தம், கீழ காலனி, சாமியாங்குளம் ஆகிய பகுதிகளில் 40க்கும் மேற்பட்ட தலித் குடும்பத்தினர் வாய்க்கால் புறம்போக்கு பகுதியில் வசித்து வருகின்றனர்.
இவர்கள் பட்டா கேட்டு காத்திருக்கும் நிலையில், கடந்த 9ஆம் தேதி நரசிங்கநத்தம் களம் புறம்போக்கு பகுதியில் தாழ்த்தப்பட்ட பிரிவினர் 25க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் குடிசைகளை அமைத்தனர். இங்கு நேரடி நெல்கொள்முதல் நிலையம் அமைய உள்ளதால் இதற்கு மாற்று சமூதாயத்தை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இருதரப்பு இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது, தலித் குடும்பத்தினர் அமைத்த குடிசைகளை மற்றொரு தரப்பினர் அடித்து நொறுக்கி பிய்த்து எறிந்தனர்.
இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தும் தலித்சமூதாயத்தினரின் குடிசைகளை அடித்து நொறுக்கிய மாற்று சமூதாயத்தினர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். உடனடியாக நரசிங்கநத்தம் கிராமத்தில் உள்ள குடியிருப்புமனை இல்லாத தலித் மக்களுக்கு குடியிருப்பு பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் ஈழவளவன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 200மேற்பட்டோர் கலந்துகொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu