செம்பனார்கோவில் பள்ளியில் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்

செம்பனார்கோவில் பள்ளியில் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்
X

முகாமை, மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் செ.ராமலிங்கம், பூம்புகார் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம். முருகன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி முகாமை துவக்கி வைத்து பார்வையிட்டனர்.

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

முகாமிற்கு, ஒன்றியக்குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர் தலைமை வகித்தார். சுகாதாரத்துறை துணை இயக்குனர் குமரகுருபரன், வட்டார மருத்துவ அலுவலர் கார்த்திக் சந்திரகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர் மஞ்சுளா ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வெங்கடேசன் வரவேற்றுப் பேசினார்.

இதில் மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் செ.ராமலிங்கம், பூம்புகார் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம். முருகன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி முகாமை துவக்கி வைத்து பேசினர்.

முகாமில் இருதயநோய், சர்க்கரை நோய், கண் பரிசோதனை உள்ளிட்ட நோய்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது கர்ப்பிணி பெண்களுக்கு ஆய்வக பரிசோதனை நடைபெற்றது. முகாமில் தொழுநோய், யானைக்கால் உடையவர்களுக்கு மருத்துவ உபகரணங்கள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு மகப்பேறு பெட்டகங்கள் உள்ளிட்ட மருத்துவ பொருட்களை மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் செ. ராமலிங்கம், எம்எல்ஏ நிவேதா முருகன் ஆகியோர் வழங்கினர்.

இம்முகாமில் நாகை வடக்கு மாவட்ட திமுக துணை செயலாளர் ஞானவேலன், ஒன்றிய செயலாளர்கள் அன்பழகன், அப்துல் மாலிக், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு அமைப்பாளர் பி.எம். ஸ்ரீதர் மற்றும் மருத்துவ சுகாதார, ஆய்வாளர்கள், கிராம சுகாதார செவிலியர்கள், ஊட்டசத்து பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!