தடுப்பூசி இருக்கு! ஆனா போடுவதற்கு ஆளில்லை

தடுப்பூசி இருக்கு! ஆனா போடுவதற்கு ஆளில்லை
X

ஆள்பற்றாக்குறையால் மருத்துவரே தடுப்பூசி போடுவதற்கு பதிவுகளை மேற்கொள்கிறார்

மயிலாடுதுறை நகர ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு எழுதி கொடுக்க ஊழியர் இல்லாததால் மக்கள் அவதி

கொரோனா 2வது அலை அதிவேகமாக பரவி வருவதால் தடுப்பூசி போடுவதற்கு பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டிவருகின்றனர். அதிலும் வயதானவர்கள் அதிக அளவில் மருத்துவமனை நோக்கிச் செல்கின்றனர்.

மயிலாடுதுறை கூறைநாடுபகுதியில் உள்ள நகர ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பூசி மருந்து தேவையான அளவு இருப்பு இருக்கும் நிலையில் காலை முதலே பொதுமக்கள் கூட ஆரம்பித்துவிட்டனர். ஆரம்ப சுகாதார மையம் என்பதால் மற்ற சிகிச்சைககாக மருத்துவர்களும், செவிலியர்களும் தங்களது வேலையை பார்த்துகொண்டிருந்த நேரத்தில் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு தேவையான ஊழியர்கள் மாற்றுப் பணிக்குச் சென்றுவிட்டனர். வயதானவர்கள் நீண்டநேரம் வரிசையில் நின்று பார்த்தும் யாரும் வராததால் இயற்கை உபாதையை கழிப்பதற்குக்கூட வசதி இல்லாத அந்த இடத்திலிருந்து பலர் திரும்பி செல்ல ஆரம்பித்தனர்.

2 மணிநேரம் கழித்து மருத்துவரே தடுப்பூசிக்கான பதிவை கொண்டுவந்து எழுதிகொடுத்து 50க்கும்மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட நடவடிக்கை மேற்கொண்டார்.

கொரோன தடுப்பூசி மருந்து இருக்கு, போடுவதற்கு ஆள் இருக்கு, அதை எழுதிகொடுத்து ஒழுங்குபடுத்த ஆள் இல்லாமல் பொதுமக்களை அலைக்கழிப்பது வேதனையாக இருந்தது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!