அருகருகே இரண்டு டாஸ்மாக் கடைகள் திறப்பு: பொதுமக்கள் ஆவேசம்!

அருகருகே இரண்டு டாஸ்மாக் கடைகள் திறப்பு: பொதுமக்கள் ஆவேசம்!
X

மயிலாடுதுறையில் புதிதாக டாஸ்மாக் மதுபானக்கடை திறப்பு: ஏற்கனவே அந்த இடத்தில் மற்றொரு டாஸ்மாக் கடை உள்ள நிலையில், மேலும் ஒரு கடையை திறப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு.

மயிலாடுதுறை அருகே இன்று புதிதாக டாஸ்மாக் கடை திறக்கப்பட்டுள்ளது. இதற்கு அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மயிலாடுதுறை நகரில் கூறைநாடு பகுதியில் இன்று புதிதாக டாஸ்மாக் கடை திறக்கப்பட்டுள்ளது. இதற்கு அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கூறைநாடு பேருந்து நிறுத்தம் அருகே ஏற்கெனவே டாஸ்மாக் கடை உள்ள நிலையில் புதிதாக மேலும் ஓரு டாஸ்மாக் கடை திறக்கப்பட்டுள்ளது.

பேருந்து நிறுத்தம் அமைந்துள்ள இடத்தில் அருகருகே இரண்டு டாஸ்மாக் கடைகள் இருப்பதால் அப்பகுதியில் குடிமகன்களின் தொந்தரவு அதிகரித்து வருகிறது.

இதனால் பேருந்து நிறுத்தத்தில் காத்திருக்கும் பெண்கள் பல்வேறு இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். எனவே அப்பகுதியில் உள்ள இந்த இரண்டு டாஸ்மாக் கடைகளையும் அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
ai in future agriculture