மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் ஆய்வு
மயிலாடுதுறை ரயில்வே நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட மணிஷ் அகர்வால்.
திருச்சி மண்டல ரயில்வே கோட்ட மேலாளர் மணிஷ் அகர்வால் இன்று மயிலாடுதுறை ரயில்வே நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். ரயில்வே ஊழியர்கள் தங்கும் அறை, நடைபாதை, குடிநீர் வசதிகள் குறித்து நேரில் பார்வையிட்டார். மயிலாடுதுறை சீர்காழி வர்த்தக சங்கங்கள் ரயில்வே பயணிகள் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் சந்தித்து கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர்.
மேலும், மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம், எஸ்.ஆர்.எம்.யு தொழிற்சங்க திருச்சி கோட்ட தலைவர் மணிவண்ணன் உள்ளிட்டோர் மேலாளரை சந்தித்து மனு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மணிஷ் அகர்வால், காரைக்கால் - பேரளம் மார்கத்தில் அகலப்பாதை பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு இன்னும் ஒன்றரை ஆண்டுகளில் ரயில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
திருத்துறைப்பூண்டி - அகஸ்தியம்பள்ளி அகலப்பாதை பணிகள் நடைபெறுவதில் சில பிரச்சனைகள் உள்ளது. அவற்றைத் தீர்க்க நடவடிக்கை எடுப்போம். திருச்சி கோட்டத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக 22 ரயில்கள் நிறுத்தப்பட்டன. படிப்படியாக அவை இயக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu