அம்பேத்கர் பிறந்தநாளை திமுகவினர் கொண்டாடினர்

அம்பேத்கர் பிறந்தநாளை திமுகவினர் கொண்டாடினர்
X

அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து திமுகவினர் மரியாதை செலுத்தினர்

டாக்டர் அம்பேத்கரின் 130வது பிறந்த நாளில் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா மேலபெரும்பள்ளம் பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு திமுக மாவட்ட பொறுப்பாளர் நிவேதா முருகன் தலைமையில், திமுகவினர் மாலை அணிவித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

இந்த நிகழ்ச்சியில் நாகை வடக்கு மாவட்ட பொருளாளர் ஜி.என்.ரவி, செம்பை தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் அப்துல்மாலிக், மேலப்பெரும்பள்ளம் ஊராட்சி மன்றத்தலைவர் தேவி சுரேஷ், செம்மை ஒன்றியக்குழு துணைத்தலைவர் மைனர் பாஸ்கர், மாவட்ட பிரதிநிதி தென்னரசு, வின்சன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் இறுதியில் தீண்டாமை ஒழிப்பு குறித்து உறுதி மொழி ஏற்றனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!