கட்டுமானத் தொழிலாளர்களுக்கான நலத்திட்ட உதவிகள்; மயிலாடுதுறை ஆட்சியர் வழங்கல்
கட்டுமான தொழிலுக்கான நலத்திட்ட உதவிகளை வழங்கும் மாவட்ட ஆட்சியர் மற்றும் எம்எல்ஏ பன்னீர்செல்வம்.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைப்புசாரா மற்றும் கட்டுமானத் தொழிலாளர்களுக்கான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் லலிதர் வழங்கினார்.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியத்தின் சார்பில் அமைப்புசாரா மற்றும் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டது.
இதில் கல்வி உதவித்தொகை, இயற்கை மரணம், விபத்து மரணம் உதவித்தொகை, ஓய்வூதியம் ஆகியவற்றிற்கான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் லலிதா, சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் முன்னிலையில் வழங்கினார்.
தொழிலாளர் நலவாரியத்தில் பதிவுபெற்ற 16 தொழிலாளர்களுக்கு கல்வி உதவித்தொகை, ஓய்வூதியம், இயற்கை மரணம்ஃஈமச்சடங்கு, விபத்து மரணம் உதவித்தொகைக்கான மின்னணு பரிமாற்ற ஆணைகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் தொழிலாளர் நல வாரியம் உதவி கணக்கு அலுவலர் ராஜராஜன் மற்றும் அரசு அலுவலர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu