கொள்ளிடத்தில் திடீரென உள்வாங்கிய கான்கிரீட் பாலம்

கொள்ளிடத்தில்  திடீரென உள்வாங்கிய கான்கிரீட் பாலம்
X

உள்வாங்கிய பாலம்.

வடகால் கிழக்கு தெரு பகுதியில் உள்ள சேதமடைந்த கான்கிரீட் பாலத்தை இடித்து விட்டு, புதிய பாலம் கட்டித் தர கோரிக்கை.

கொள்ளிடம் ஒன்றியம் வடகால் ஊராட்சி கிழக்குத் தெருவில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் கிராமத்திற்கு செல்வதற்கு சாலை வசதி அமைக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் திருமுல்லைவாசல்-சீர்காழி செல்லும் சாலையின் அருகே உள்ள வடகால் கிழக்கு தெரு பகுதியில் உள்ள கான்கிரீட் பாலம் திடீரென்று உள்வாங்கியது. இதனால் அப்பகுதி மக்கள் பழைய பாலத்தை இடித்துவிட்டு புதிய மதுகு பாலம் அமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் பள்ளி மாணவர்கள் மற்றும் முதியவர்கள் வாகன ஓட்டிகள் இந்த பாலத்தை கடந்து செல்லும்போது விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.எனவே இப்பகுதி மக்களின் நலன் கருதி பாலத்தை உடனடியாக சரி செய்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்க வேண்டும் என்று அப்பகுதி கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!