மயிலாடுதுறை அருகே வாய்க்கால் கரை உடைந்து வீடுகளுக்குள் வெள்ளம்

மயிலாடுதுறை அருகே  வாய்க்கால் கரை உடைந்து வீடுகளுக்குள் வெள்ளம்
X

வெள்ளம் சூழ்ந்த வீடுகள்.

வாய்க்காலின் குறுக்கே இருந்த சாலையில் தண்ணீர் செல்ல வழி இல்லாததால் 100க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் சூழ்ந்தது.

மயிலாடுதுறை அருகே மாப்படுகையில் 20 வருடங்களுக்கு முன்னர் தனி நபர் ஒருவர் (பாண்டியன்) ஸ்ரீநாராயணபுரம் என்ற பெயரில் வாய்க்கால் செல்லும் பாதையில் குறுக்கே மண்சாலை அமைத்து நகரை உருவாக்கி விற்பனை செய்துள்ளார். இங்கு 350 பேர் வீடு கட்டி குடியிருந்து வருகின்றனர். இந்நிலையில் 45 ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் இருந்த பழைய முத்தப்பன் காவிரி வாய்க்காலை கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் முதலமைச்சரின் சிறப்பு தூர்வாரும் நிதி திட்டத்தின் கீழ் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆக்ரமிப்புகளை அகற்றி தூர்வாரினர்.

இந்நிலையில் வாய்க்காலில் சாலை அமைக்கப்பட்ட பகுதியில் பாலம் கட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் பொதுப்பணித்துறையினர் வாய்க்காலின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த சாலையில் பாலம் கட்டாமலும், தண்ணீர் செல்ல வழி ஏற்படுத்தி தராமல் அப்படியே விட்டுவிட்டு சென்று விட்டனர். இந்நிலையில் காவிரி ஆற்றில் இருந்து முத்தப்பன் வாய்க்காலுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. ஸ்ரீநாராயணபுரத்தில் வாய்கால் குறுக்கே உள்ள சாலையால் தண்ணீர் செல்ல வழியின்றி அபயாம்பாள்புரத்தில் வாய்கால் கரை உடைப்பு ஏற்பட்டது. 100க்கும் மேற்பட்ட வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது.

வாய்காலில் அமைக்கப்ட்ட சாலையின் ஒருபுறத்தில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. மற்றொருபுறம் வாய்கால் வறண்டு தரிசாக கிடக்கிறது. தண்ணீர் செல்ல வழியில்லை என்று தெரிந்தும் பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் நகரில் அனைத்து வசதிகளை ஏற்படுத்தி தருவதாக ஒவ்வொரு குடும்பத்தினரிடமும் கூடுதலாக ரூ.10ஆயிரம் வசூலித்துக் கொண்டு, இடத்தை விற்பனை செய்த பாண்டியன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். உடனடியாக வாய்க்காலில் அமைக்கப்பட்டுள்ள சாலையில் தண்ணீர் செல்ல தற்காலிகமாக குழாய் அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குடியிருப்பு வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!