சீர்காழியில் நூலிழையில் உயிர் தப்பிய சிறுவன்; சிசிடிவி காட்சி பரபரப்பு

சீர்காழியில் நூலிழையில் உயிர் தப்பிய சிறுவன்; சிசிடிவி காட்சி பரபரப்பு
X

சிறுவன் உயிர் தப்பிய சிசிடிவி காட்சி.

சீர்காழியில் இருசக்கர வாகனத்தில் தவறி விழுந்த சிறுவன் நூலிழையில் தப்பிய சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி பழைய பேருந்து நிலையம் அருகே தனியார் வங்கி ஏ.டி.எம் மையத்தில் பணம் எடுத்த சிறுவன், தனது இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க காத்திருந்தான். பிரதான சாலை என்பதால் தொடர்ந்து வாகனங்கள் கடந்து கொண்டே இருந்தது.

ஆனாலும், சாலையை வேகமாக கடந்த சிறுவன் வாகனத்தை திருப்ப முயன்றபோது நிலை தடுமாறி கீழே விழுந்தான். அப்போது பின்னால் வந்த தனியார் பேருந்து ஓட்டுநர் சாதுர்யமாக பேருந்தை சடன் பிரேக் போட்டு நிறுத்தினார்.

ஓட்டுநரின் துரிதச் செயலால் பெரும் விபத்து தவிர்க்கபட்டு சிறுவன் நூலிழையில் உயிர் தப்பினான். பதை பதைக்கும் இந்த சி.சி.டி.வி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

பெற்றோர் தங்கள் வீட்டில் உள்ள சிறுவர்களை இருசக்கர வாகனத்தை இயக்க அனுமதிக்க கூடாது எனவும், மீறினால் சிறுவர்கள் மற்றும் பெற்றோர் மீது போலீசார் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
ai marketing future